Thursday, 27 September 2012

இய‌ற்கை மருத்துவ‌ம்




அன்பு மாண‌வ‌ர்க‌ளே,
Dear students,

இயற்கையாக விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவைகள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டவைகள். இவற்றின் மூலமாக நோயினைத் தீர்க்கும் மருத்துவம் இயற்கை மருத்துவமாகும்.
Vegetables, fruits and spinach have great medicinal values. As they protect one from diseases and help to build their immune system.


ந‌ம் வீட்டில் ப‌ய‌ன்ப‌டுத்தும் எளிய‌ உண‌வுப் பொருள்க‌ளும் ஆரோக்கிய‌த்திற்கு உக‌ந்த‌தாக‌ உள்ள‌து.
Even the simple ingredients which are commonly used for cooking contributes to one's good health.


"ம‌ருந்தென‌ வேண்டாவாம் யாக்கைக்கு அருத்திய‌து
அற்ற‌து போற்றி உணின்"

என்ப‌து வ‌ள்ளுவ‌ர் வாக்கு.

அன்றாட‌ம் நாம் உட்கொள்ளும் உண‌வில் இருந்து நாம் ப‌ல‌ ந‌ன்மைக‌ளை பெற‌லாம். உதார‌ண‌மாக‌, ரத்த விருத்தி தரும் வாழைக்காய், புற்றுநோயை விரட்டும் மாம்பழம், புற்று நோய் அபாயத்தைத் தடுக்கும் கறிவேப்பிலை, புத்துணர்ச்சி தரும் இளநீர், மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய், உடல் சூட்டை தணிக்கும் புடலங்காய், கசப்பு அமுதம் பாகற்காய் ம‌ற்றும் உடலுக்கு பலத்தைத் தரும் இஞ்சி.
Daily intakes of such food would beneficial to our health. (Stated are a few examples of the benefits of the specific vegetables) Banana stimulates secretion of red blood cells. Mango and curry leaves prevent cancer. Tender coconut rejuvenates the body. Jack fruit strengths the brain. Snack guard cools the body. Bitterguard strengths the body.


ச‌ரியான‌ உணவை தேர்ந்தெடுத்து உண்ப‌த‌ன் மூல‌மாக‌, நோய் வ‌ராம‌ல் நம்மைத் த‌ற்காத்துக்கொள்ள‌லாம்.
Eating the right choice of food prevents us from diseases.

இதில் இணைக்க‌ப்ப‌ட்டிருக்கும் ப‌ட‌த்தைக் காணுங்க‌ள்.
View the attached video.

கீழ் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் சில‌ கேள்விக‌ளுக்குப் ப‌தில‌ளியுங்க‌ள்.
Answer the following questions.

இய‌ற்கை மருத்துவ‌ம் ப‌ற்றி விரிவாக‌ வ‌குப்பில் பேச‌லாம்.
We will discuss further in class about natural remedies.

அன்புட‌ன்,
ஆசிரியை.


1.இந்தப்‌ ப‌ட‌த்தைப் பார்த்து, நீ இய‌ற்கை ம‌ருத்துவ‌த்தைப் பார்த்து என்ன‌ நினைக்கிறாய்?
1. From the video, give your views on natural medicine.

2.'பழைய‌து' என்று எதை பாட்டி குறிப்பிடுகிறார்?
2. What is the presenter refering to when she mentions 'porridge'?

3.'ப‌ழையதை' உண்ப‌தின் ந‌ன்மைக‌ள் யாவை?
3. What are the benefits of having porridge?

4. காய்க‌றிக‌ளின் ப‌ய‌ன்க‌ளை குறிப்பிடுக‌.
4. State a few benefits of eating vegetables.

5. நீ ஒர் இய‌ற்கை ம‌ருத்துவ‌ முறையைப் ப‌கிர்ந்துகொள்க‌.
5. Suggest one natural remedy.

No comments:

Post a Comment