TEL Group Assignment
(In this page we include instructions for students. Students are asked to read the next page for their homework and asked to follow instructions. They are reminded that their work should be completed during weekend and be prepared to continue the work in class on Tuesday.)
வணக்கம் மாணவர்களே .
அடுத்த பக்கத்திலுள்ள ஒளிப் படத்தைப் பாருங்கள். திருமதி ரேவதி சங்கரன் என்பவர் வழங்கும் குறிப்புகளைக் கேளுங்கள். அதன் பின்னர் கொடுக்கப்பட்டுள்ள வேலைகளைச் செய்யுங்கள்.
இந்த வார இறுதியில் நீங்கள் வேலைகளை முடிக்க வேண்டும். அடுத்த செவ்வாய்க்கிழமை தமிழ் வகுப்புக்கு வரும்போது இந்த வேலையின் தொடர்ச்சி இடம்பெறும். ஆகவே, மறவாமல் செய்து முடித்து விடுங்கள்.
அன்புடன்,
ஆசிரியை.
இயற்கையாக விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவைகள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டவைகள். இவற்றின் மூலமாக நோயினைத் தீர்க்கும் மருத்துவம் இயற்கை மருத்துவமாகும்.
Vegetables, fruits and spinach have great medicinal values. As they protect one from diseases and help to build their immune system.
நம் வீட்டில் பயன்படுத்தும் எளிய உணவுப் பொருள்களும் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது.
Even the simple ingredients which are commonly used for cooking contributes to one's good health.
அன்றாடம் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நாம் பல நன்மைகளை பெறலாம். உதாரணமாக, ரத்த விருத்தி தரும் வாழைக்காய், புற்றுநோயை விரட்டும் மாம்பழம், புற்று நோய் அபாயத்தைத் தடுக்கும் கறிவேப்பிலை, புத்துணர்ச்சி தரும் இளநீர், மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய், உடல் சூட்டை தணிக்கும் புடலங்காய், கசப்பு அமுதம் பாகற்காய் மற்றும் உடலுக்கு பலத்தைத் தரும் இஞ்சி.
Daily intakes of such food would beneficial to our health. (Stated are a few examples of the benefits of the specific vegetables) Banana stimulates secretion of red blood cells. Mango and curry leaves prevent cancer. Tender coconut rejuvenates the body. Jack fruit strengths the brain. Snack guard cools the body. Bitterguard strengths the body.
சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலமாக, நோய் வராமல் நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்.
Eating the right choice of food prevents us from diseases.
இதில் இணைக்கப்பட்டிருக்கும் படத்தைக் காணுங்கள்.
View the attached video.
கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் சில கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.
Answer the following questions.
இயற்கை மருத்துவம் பற்றி விரிவாக வகுப்பில் பேசலாம்.
We will discuss further in class about natural remedies.
அன்புடன்,
ஆசிரியை.
1.இந்தப் படத்தைப் பார்த்து, நீ இயற்கை மருத்துவத்தைப் பார்த்து என்ன நினைக்கிறாய்?
1. From the video, give your views on natural medicine.
2.'பழையது' என்று எதை பாட்டி குறிப்பிடுகிறார்?
2. What is the presenter refering to when she mentions 'porridge'?
3.'பழையதை' உண்பதின் நன்மைகள் யாவை?
3. What are the benefits of having porridge?
4. காய்கறிகளின் பயன்களை குறிப்பிடுக.
4. State a few benefits of eating vegetables.
5. நீ ஒர் இயற்கை மருத்துவ முறையைப் பகிர்ந்துகொள்க.
5. Suggest one natural remedy.
நம் முன்னோர்கள் நமக்குக் கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை விட்டுச் சென்றது போல் நம் உடல் நலத்தைக் காக்கும் அரிய இயற்கையான மருத்துவப் பொருட்களையும் விட்டுச் சென்றுள்ளனர்.அவர்கள் தாம் உண்ணும் உணவில் அம்மருத்துவப் பொருட்களையும் சேர்த்தே சமைத்து உண்டனர். அதுமட்டுமல்ல
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்'
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க வாழ்ந்தனர். மேலும், உணவே மருந்து, மருந்தே உணவு என்று வரையறுத்து வாழ்ந்தவர்கள். அத்தகைய மருத்துவப் பொருட்களைப் பற்றி மேலே உள்ள ஒளி வழிப் படக்காட்சிகளைப் பார்த்து கீழ்காணும் வினாக்களுக்குப் பதிலளியுங்கள்.
Dear students,
Similar to arts, culture and tradition, our ancestors have given us precious natural products that can be used as medicines to lead a healthy life. They included these natural products in their cooking. They lead a life as per the scholar Thiruvalluvar's words.
"Disease, its cause, what may abate the ill:
Let leech examine these, then use his skill"
Moreover they believed that food is medicine and medicine is food. Watch the movie clip that describes these and answer the questions given below.
1. முதல் ஒளி வழிப் படக்காட்சியில் உள்ள மூன்று பொருட்களின்
பெயர்களைக் கூறு?
1. Name any three things that you saw in the first video.
2. பெருங்காயத்தின் மருத்துவக் குணம் பற்றிக் கூறு?
2. What is the medicinal value of asafoetida?
3. முதல் ஒளி வழிப் படத்தில் உள்ளவர் ஏன் வெற்றிலை பாக்கு என்று
சேர்த்துச் சொல்லுவதாகக் கூறுகிறார்?
3. Why is the bettle leaf always called together with areca in the first video?
4. இரண்டாவது ஒளி வழிப் படக்காட்சியில் சின்னப் பெண் ஏன் தும்முகிறாள்?
4. Why is the girl sneezing in the second video?
5. இரண்டாவது ஒளி வழிப் படக்காட்சியில் தன் பேத்தியின் நோயைப் போக்க
பாட்டி எந்தப் பொருளை மருந்தாகக் கொடுக்கிறார்.
5. What is the Indian Authentic spice the grandmother give her grand daughter to cure her in the second video?
6. இரண்டு ஒளி வழிப் படக்காட்சியின் மூலம் நீ அறிந்து கொண்டவை என்ன?